கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த ரியல் எஸ்டேட் அதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கெலமங்கலம் பகுதியில் பிரகாஷ் என்ற ரியல் எஸ்டேட் அதிபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு எஸ்வந்த், பரத் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பிரகாஷ் தனது விவசாய நிலத்தில் பசுமை குடில் அமைத்து ரோஜா, மிளகாய் போன்றவற்றை பயிரிட்டு ஏற்றுமதி செய்துள்ளார். இதனையடுத்து விவசாயத்திலும், ரியல் […]
