ராவணன் தமிழ்ச் சமூகத்தின் தலைவன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு நியாயமற்றது என்றும்; அதை மறுஆய்வு செய்ய வலியுறுத்தியும் சென்னை சேப்பாக்கத்தில் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், […]
