3 மாத காலமாக அரிசி வழங்கவில்லை எனக் கூறி கிராம மக்கள் 200-க்கும் அதிகமானோர் நியாயவிலைக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள பரவத்தூர் மேற்கு கிராமத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. இங்கு வசித்து வரும் மக்கள் பெரும்பாலும் சிறு, குறு விவசாயிகள், தினமும் கூலிவேலைபார்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்கள் கடந்த 3 மாத காலமாக கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இருந்துவரும் நிலையில், எந்தவித வருமானமும் இல்லாமல் மிகவும் […]
