இரண்டு மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வழங்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு ராமாபுரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ரேஷன் கடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு பிறகு ரேஷன் கடையை திறந்து பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு போன்ற பொருட்களை விநியோகிக்க ஆரம்பித்துள்ளனர். […]
