அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென பற்றி எரிந்த தீ விபத்தில் சிக்கி பச்சிளம் குழந்தை உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவிலுள்ள யெகாடெரின்பக் என்ற நகரில் ஒன்பது மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் திடீரென தீ பற்றி எரிந்தது. இந்த தீயானது சிறிது நேரத்தில் அடுத்தடுத்த தளங்களுக்கு வேகமாக பரவி விட்டது. அந்த நேரத்தில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால் கொழுந்துவிட்டு எரிந்த தீயை கவனிக்கவில்லை. […]
