தனி மனிதத் தாக்குதல்கள் மற்றும் அவதூறு நிகழ்த்தப்படுவது சிலருக்குப் பண்பாடாகவே இருக்கிறது என்று இயக்குநர் பா.ரஞ்சித், திருமாவளவனுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சனாதன கல்விக்கொள்கை எதிர்ப்பு மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், அயோத்தி தீர்ப்பை விமர்சித்து பேசியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.திருமாவளவனின் இந்த பேச்சுக்கு பல்வேறு இந்து அமைப்புகளும் தொடர்ந்து கண்டனக்குரல் எழுப்பி வருகின்றனர். அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் இந்து […]
