தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆயிரம் மங்கலம் கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இவருக்கு லலிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பழனி குடித்துவிட்டு லலிதாவிடம் தகராறில் ஈடுபட்டதினால் அவர் கோபத்தில் தனது மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் இரவு நேரத்தில் லலிதா தனது வீட்டிற்கு வந்து திண்ணையில் படுத்து தூங்கியுள்ளார். இதனை அடுத்து அதிகாலையில் லலிதா எழுந்து […]
