Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திரும்பவும் வேலை வேண்டும்…. கிணற்றில் கிடந்த சடலம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

நகராட்சியில் பணிபுரிந்த பெண் ஊழியர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் ஜோதி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜோதி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பயன்பாடற்ற கிணற்றில் சடலமாக கிடந்துள்ளார். இதைப் பார்த்த பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பின் தீயணைப்பு துறையினரை வரவழைத்து கிணற்றில் இருந்த ஜோதியின் சடலத்தை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதனை அடுத்து இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நான் இன்னும் சாகவில்லை…. நிராகரிக்கப்பட்ட மனு…. முதலமைச்சருக்கு புகார்….!!

மூதாட்டியின் முதியோர் உதவித்தொகை திடீரென நிறுத்தப்பட்டதால் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டு கிராமத்தில் முனியம்மாள் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவர் கடந்த சில வருடங்களாக தமிழக அரசின் முதியோர் உதவித்தொகை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் இவருக்கு வழங்கப்பட்ட உதவித்தொகை திடீரென நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தனது கிராமத்தில் இருக்கும் மற்றவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படும் நிலையில், தனக்கு மட்டும் உதவித்தொகை வழங்காததினால் தபால் அலுவலகம், […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“கட்டாயம் அணிய வேண்டும்” பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…. காவல்துறை சூப்பிரண்டின் செயல்….!!

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என காவல்துறை சூப்பிரண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முத்துக்கடை பகுதியில் காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். அப்போது கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் முககவசம் அணிவதன் அவசியத்தையும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் அவசியத்தையும் அவர் விளக்கிக் கூறியுள்ளார்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

2 லாரிகள் நேருக்கு நேர் மோதல்…. போக்குவரத்து பாதிப்பு…. போலீஸின் செயல்….!!

2 லாரிகள் நேருக்கு நேர் மோதியதால் சிப்காட் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் சாலையில் பெங்களூரிலிருந்து கேஸ் ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி வந்த டேங்கர் லாரியும், அதே போல் பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் லாரிகளை ஓட்டி வந்த கவுடா, சின்னராசு ஆகிய இருவரும் காயமடைந்துள்ளனர். பின்னர் இவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கட்டாயம் அணிய வேண்டும்…. தடுப்பு நடவடிக்கைகள்…. ஆட்சியரின் ஆய்வு….!!

கடைவீதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேருந்து நிலையம் மற்றும் கடைவீதிகளில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்துள்ளார். அப்போது பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் முககவசம் வழங்கி கட்டாயமாக அணிய வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு முககவசம் அணியாமல் வெளியில் சுற்றுப் பவர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சிறப்பாக நடைபெற்ற விழா…. அலைமோதிய பக்தர்கள் கூட்டம்…. அதிகாரிகளின் தகவல்….!!

கார்த்திகை மாதத்தில் நடைபெற்ற பெருவிழாவில் சேர்ந்த காணிக்கை பணத்தை கோவில் அதிகாரிகள் எண்ணி உள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நரசிம்மர் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு கார்த்திகை மாதத்தில் நடைபெற்ற விழாவில் தமிழகம் மட்டுமில்லாமல் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வந்த லட்சக்கணக்கான பொதுமக்கள் நரசிம்மர் சாமியை தரிசனம் செய்து சென்றுள்ளனர். இதனையடுத்து நரசிம்மர் கோவில்களில் இருக்கும் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர். பின்னர் கோவில் இணை ஆணையர் ஜெயா, ஆய்வாளர் பிரியா, […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தொடர் கனமழை…. கோவிலுக்குள் தேங்கிய தண்ணீர்…. பூஜைகளுக்கு தடை….!!

தொடர் கனமழை காரணத்தினால் கோவிலின் உள்ளே தண்ணீர் தேங்கி நின்றுள்ளது. ரணிபெட்டை மாவட்டத்திலுள்ள ரத்தினகிரி பகுதிக்கு அடுத்ததாக இருக்கும் பூட்டுத்தாக்கு பைபாஸ் சாலையில் இருந்து மேலகுப்பம் செல்லும் இடத்தில் திரவுபதி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலின் உள்ளே சமீபத்தில் பெய்த கனமழையின் காரணத்தினால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இது பற்றி ஊராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கோவிலில் பூஜைகள் நடைபெறாமல் இருக்கிறது.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தண்டவாளத்தை கடந்த சிறுவன்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தண்டவாளத்தை சைக்கிளில் கடந்த போது ரயில் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புளியமங்கலம் கிராமத்தில் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இவர் வீட்டில் இருந்து சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். அப்போது ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த ஜல்லிக் கற்களை “பேக்கிங்” செய்யும் ரயில் விக்னேஷ் மீது மோதியது. இந்த விபத்தில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பொங்கல் பரிசு தொகுப்பு…. சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி…. அமைச்சரின் செயல்….!!

பொங்கல் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு பரிசு தொகுப்பை அமைச்சர் காந்தி வழங்கியுள்ளார். ராணிப்பேட்டையில் வசிக்கும் குடும்ப அட்டை வைத்திருக்கும் நபர்களுக்கு பொங்கல் தினத்தை முன்னிட்டு பரிசு தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி உள்ளார். இதில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ முன்னிலை வகித்துள்ளார். இதனை அடுத்து துணிநூல் மற்றும் கைத்தறி துறை அமைச்சர் ஆர். காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் இலங்கை தமிழர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நீர்வழிப் பாதைகள் ஆக்கிரமிப்பு…. தீவிரமாக நடைபெறும் சீரமைக்கும் பணி…. போலீஸ் பாதுகாப்பு….!!

நீர்வழியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தென்மாம்பாக்கம் பகுதியில் விவசாயம் செய்தவர்கள் தங்கள் நிலத்திற்கு அருகில் இருக்கும்  கச கால்வாயினை ஆக்கிரமிப்பு செய்து கடந்த சில வருடங்களாக விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் ரெட்டிவலம் உள்பட மூன்று பகுதிகளில் பல நீர்வழிப் பாதையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் பேரில் கடந்த 2 தினங்களாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி பொதுப்பணித் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இடமாற்றம் கூடாது…. தீவிரமாக நடைபெற்ற கூட்டம்…. நிர்வாகிகளின் தகவல்….!!

ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் ஒன்றியத்திற்குட்பட்ட 40 ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு சார்பாக அவசர ஆலோசனை கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் கார்த்திக் தலைமை தாங்கி உள்ளார். இதில் செயலாளர் வெங்குபட்டு பாலசந்தர் முன்னிலை வகித்துள்ளார். இந்நிலையில் ஆலோசனை கூட்டத்தில் வைத்து வட்டார வளர்ச்சி அலுவலரான அன்பரசன் என்பவர் தொகுப்பு வீடுகளை வழங்குவதற்கு ஊராட்சி மன்ற […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கேட்பாரற்றுக் கிடந்த மூட்டைகள்…. சோதனையில் தெரிந்த உண்மை…. அதிகாரிகளிடம் ஒப்படைப்பு….!!

கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தோப்பு கானா பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் வட்ட வழங்கல் அலுவலர் சந்தியா, வருவாய் ஆய்வாளர் மாதவன் ஆகியோர் அப்பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். இதனை அடுத்து அப்பகுதியில் கேட்பாரற்று 40 மூட்டைகள் கிடந்தது. இதை திறந்து பார்த்ததில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்துள்ளது. பின்னர் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து நுகர்பொருள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தாயின் கவனக்குறைவு…. பலியான சிறுவன்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தாய் குளிக்க வைத்திருந்த வெண்ணீரில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மலைமேடு எம்.ஜி.ஆர் நகரில் நடராஜ ரகு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு துர்கா என்ற மனைவியும், குமரன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் துர்கா குளிப்பதற்காக தண்ணீரை கொதிக்க வைத்து இறக்கி கீழே வைத்திருந்திருக்கிறார். அப்போது எதிர்பாராவிதமாக சிறுவன் குமரன் அதன் உள்ளே இறங்கி உள்ளான். இந்த விபத்தில் சிறுவன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கோவில் உண்டியல் உடைப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் வலைவீச்சு….!!

கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் பகுதியில் பிரசித்தி வாய்ந்த திருப்பாற்கடல் பெருமாள் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலுக்கு செல்லும் வழியில் ஸ்ரீ துர்க்கையம்மன் கோவில் அமைந்திருக்கின்றது. இந்நிலையில் இந்த கோவிலில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து சாமி சிலைகளை உடைத்து உண்டியல் பணத்தை திருடி சென்றுள்ளனர். இதனை அடுத்து கோவில் சிலைகள் உடைக்கப்பட்ட இடத்தில் டி.எஸ்.பி புகழேந்தி கணேஷ் நேரில் சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“உங்களுக்கும் உண்டு” கட்டாயம் போட வேண்டும்…. ஆட்சியரின் தகவல்….!!

15 வயது முதல் 18 வயது வரை இருக்கும் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 15 வயது முதல் 18 வயது வரை இருக்கும் நபர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளில் வைத்து தடுப்பூசி செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. இதில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே போடப்படும். இது பற்றி இந்த வயதிற்குட்பட்டவர்கள் COWIN20 PORTAL மூலமாக முன்பதிவு செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

உடைந்து கிடந்த சிலைகள்…. அலைமோதிய பக்தர்கள் கூட்டம்…. போலீஸ் விசாரணை….!!

அம்மன் கோவிலில் சிலைகள் மற்றும் சூலம் ஆகியவை சேதமடைந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அத்திப்பட்டு கிராமத்தில் பழமை வாய்ந்த துர்க்கை அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் வாரம் தவறாமல் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகளும் மற்றும் ஆடி மாதத்தில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய வந்துள்ளனர். இதனையடுத்து கோவிலில் பூஜைகள் முடித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பல்வேறு தனியார் நிறுவனங்கள்…. அரிய வாய்ப்பு…. அதிகாரிகள் தகவல்….!!

தனியார் திருமண மண்டபத்தில் வைத்து பல்வேறு நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள திருமண மண்டபத்தில் வைத்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாகதீனதயாள் உபாதியாய ஊரக கவுசல்ய யோஜனா திட்டத்தின் மூலமாக வட்டார அளவிலான வேலை வாய்ப்பு முகாம் செய்வாய் கிழமை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் வேலைவாய்ப்பற்ற 18 வயது நிரம்பிய பெண் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“மிகப்பெரிய ஆயுதம்” கட்டாயம் போட வேண்டும்…. ஆட்சியரின் ஆய்வு….!!

கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றதை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கும் அனைத்து பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் தற்போது நடைபெற்றுள்ளது. இதில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுள்ளது. இதை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது கலெக்டர் கூறியதாவது, தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி போடாமல் காலக்கெடு முடிந்தவர்கள் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனவும், […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தெருவில் புத்தாண்டு கொண்டாட்டம்…. இரு தரப்பினரிடையே மோதல்…. போலீஸ் நடவடிக்கை….!!

புத்தாண்டு கொண்டாட்டத்தில் வாலிபரை கத்தியால் குத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருமால்பூர் காலனி பகுதியில் பிரவீன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பிரதாப், லோகேஷ், பிரேம்குமார் மற்றும்  நவீன் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதன்பின் புத்தாண்டு விழா கொண்டாட்டத்தின் போது இருவருக்கு இடையே மோதல் ஏற்பட்டதில் பிரேம்குமார் உள்ளிட்ட 4 பேரும் பிரவீன்குமாரை தாக்கி கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கொட்டித் தீர்த்த மழை…. ஏரியில் உடைப்பு…. அதிகாரிகளின் செயல்….!!

கனமழையால் ஏரியில்  உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கனமழை பெய்த காரணத்தினால் ஏரிகள் நிரம்பி உள்ளது. இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பாக திடீரென பெய்த கனமழையின் காரணத்தினால் சிறுவளையம் ஏரியின் மத்தியில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்ததால் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஆதலால் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து வெளியேற தொடங்கியுள்ளது. இதனையடுத்து அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இது பற்றி ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஆங்கில புத்தாண்டு பண்டிகை …. சிறப்பு சாமி தரிசனம்…. அலைமோதிய பக்தர்கள் கூட்டம்….!!

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பாலமுருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பூட்டுத்தாக்கு கிராமத்திற்கு அடுத்ததாக அமைந்திருக்கும் ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் சாமியை தரிசனம் செய்ய கோவில் படிக்கட்டில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்துள்ளனர். மேலும் சாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் வரிசையில் நிற்கும் காட்சி படத்தின் மூலம் காணலாம்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டும்…. சிறப்பாக நடைபெற்ற பூஜைகள்…. பக்தர்களின் கோரிக்கை….!!

வெங்கடேச பெருமாள் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு அதிகமான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய வந்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருப்பாற்கடல் பகுதியில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இங்கு பெருமாளை ஒருசேர தரிசித்தால் சித்திரகுப்தன் எழுதி வைத்த பாவங்கள் விமோசனம் கிடைக்கும் என்பது கோவிலில் ஐதீகமாக இருக்கிறது. அதன்பின் கோவிலில் லிங்க அடிபாகத்தின் மீது பிரசன்ன வெங்கடேச பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளார். இதனை அடுத்து ஆங்கில புத்தாண்டு மற்றும் மார்கழி மாத பூஜை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அநியாயம் பண்றாங்க…. கொலை மிரட்டல் விடுத்த கும்பல்…. காவல்துறை சூப்பிரண்டிடம் மனு….!!

கந்து வட்டி கும்பல் கொலை மிரட்டல் விடுவதாக காவல்துறை சூப்பிரண்டிடம் மனு அளித்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கின்ற காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தில் பாண்டியன் என்பவர் புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியதாவது, நெமிலி தாலுக்கா வேகாமங்களம் கிராமத்தில் நான் வசித்து வருகிறேன். அரக்கோணத்தில் இருக்கும் டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறேன். அதன்பின் வீடு கட்டும் பணிக்காக சிலரிடம் பணம் வாங்கியுள்ளேன். இதனை அடுத்து வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்தி விட்டேன். இருப்பினும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நடந்து சென்ற பெண்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நடந்து சென்ற பெண் மீது கிரேன் வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஜே.ஜே நகர் பகுதியில் நாகம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் தோல் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மாலைமேடு அருகாமையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது பின்புறமாக வந்த கிரேன் வாகனம் நாகம்மாள் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மொத்தம் 9 லட்சம்…. சிறப்பாக நடைபெற்ற விழா…. தலைவரின் செயல்….!!

9 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 2 புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைத்ததை தலைவர் வடிவேலு தொடங்கி வைத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சயனபுரம் கிராமத்தில் 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு புதிய மின்சார டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கான தொடக்க விழா தற்போது நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு மின் பகிர்மான கோட்ட செயற்பொறியாளர் கண்ணன் தலைமை தாங்கியுள்ளார். இதனை அடுத்து ஊராட்சி மன்ற தலைவர் பவானி வடிவேலு முன்னிலை வகித்து உள்ளார். அதன்பின் உதவி பொறியாளர் சரவணன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தகவல் வந்துச்சு…. குட்கா பறிமுதல்…. போலீஸ் வலைவீச்சு….!!

சாலையோரம் விபத்துக்குள்ளான காரில் இருந்து 15 மூட்டை குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேல்விஷாரம் சாதிக்பாஷா நகர் அருகாமையில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று விபத்து ஏற்பட்டு சாலையோரம் இருப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்ததில் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் நிலைதடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்பு வேலி மீது மோதி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பேருந்து-லாரி மோதல்…. காயமடைந்த ஓட்டுனர்கள்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதி நோக்கி கோயம்புத்தூரிலிருந்து உப்பு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் லாரி பெருங்காட்சி ஏரிப் பகுதியில் சென்ற போது தனியார் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதி உள்ளது. இதில் பேருந்தின் முன்பகுதி நொறுங்கி சேதமடைந்துள்ளது. இதில் லாரி ஓட்டுநர் தமிழ்ச்செல்வன், பஸ்சில் இருந்த விக்னேஷ் மற்றும் பேருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை…. பாதுகாப்பு பணியில் போலீஸ்…. சூப்பிரண்டு தகவல்….!!

புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 600 காவல்துறையினர் ஈடுபட இருப்பதாக காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தின் காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது பரவி வருகின்ற உருமாறிய ஒமைக்ரான்‌ வைரஸ் பரவலை தடுப்பதற்காகவும் தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் பண்டிகை காலங்களில் தொற்று அதிகரிக்கக் கூடும் என்பதால் பொதுமக்கள் வெளியில் ஒன்று கூடுவதை முற்றிலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பல்வேறு கோரிக்கைகள்…. பயணிகள் சங்கத்தினர் மனு…. ரயில்வே மேலாளர் ஆய்வு….!!

ரயில் நிலையத்தை ரயில்வே மேலாளர் கணேஷ் திடீரென ஆய்வு செய்துள்ளார். அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயில்வே மேலாளர் கணேஷ் ஆய்வு செய்துள்ளார். அப்போது நடைமேடை மற்றும் நடைமேடை மேம்பாலம் அருகே இருக்கும் லிப்ட், காவல் நிலைய கட்டிடம், ரயில் ஓட்டுனர்கள், சிக்னல் அறை, ரயில் கட்டுப்பாட்டு அறை, பயணிகள் மற்றும் கார்டுகள் ஓய்வறைகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து ரயில்வே போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம், டிக்கெட் பரிசோதகர் அலுவலகம், ரயில் நிலையம் அருகே நடைபெற்று வருகின்ற […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்ன காரணமா இருக்கும்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள உப்புப்பேட்டை பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக பாலாஜி மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அதன்பின் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பாலாஜி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பல்வேறு கோரிக்கைகள்…. சிறப்பாக நடைபெற்ற கூட்டம்…. ஆட்சியரின் உத்தரவு….!!

கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் பகுதி விவசாயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து பேசியுள்ளனர். அப்போது நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும், பொட்டாஷ் விலை உயர்வை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அனுமதி இல்லை…. அறிக்கை வெளியீடு… ஆட்சியரின் தகவல்….!!

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை என மாவட்ட கலெக்டர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தின் கலெக்டர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியதாவது, கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதினால் இம்மாவட்டத்தில் பூங்காக்கள், பொது இடங்கள், சாலைகள், தனியாருக்கு சொந்தமான உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், தங்கும் விடுதிகள் போன்ற பல இடங்களில் இரவில் நடத்தப்படும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்பது தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றது. இந்நிலையில் கூட்டம் கூடி புத்தாண்டு கொண்டாடப்படும் பட்சத்தில் தற்போது […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

2 கோவில்களில் திருட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

2 கோவில்களின் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள செந்தில் நகர் பகுதியில் பிரத்யங்கிரா தேவி கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இதன் அருகாமையில் விநாயகர் கோவிலும் அமைந்திருக்கிறது. அதன்பின் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் 2 கோவில்களிலும் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த உண்டியல்களில் இருந்த 12,000 ரூபாய் மற்றும் அம்மன் சிலையில் இருந்த வெள்ளை குண்டுமணி ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். இதனை அடுத்து கோவிலில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நீர்மட்டம் உயர்வு…. தீவிரமாக நடைபெறும் நடவு பணி…. விவசாயிகள் கோரிக்கை….!!

நடவு பணி தொடங்கியதால் கொள்முதல் நிலையங்களை அமைத்து உடனடியாக பணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணத்தினால் பாலாறு மற்றும் பொன்னையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இம்மாவட்டத்தில் இருக்கும் ஏரிகள் நிரம்பி நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து இருக்கிறது. இதனை அடுத்து விவசாய கிணறுகளில் நீர் ஊற்று ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணத்தினால் ஆற்காடு உள்பட 10 இடங்களில் சிறு சிறு விவசாயிகள் தங்கள் நிலத்தை உழுது […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“இல்லம் தேடி கல்வி” சிறப்பாக நடைபெற்ற முகாம்…. தன்னார்வலர்களுக்கு ஆலோசனை….!!

அரசுப் பள்ளிகளில் வைத்து இல்லம் தேடி கல்வித் திட்டம் தன்னார்வலர்கள் முகாம் நடைபெற்றுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வித்திட்டம் தன்னார்வலர்கள் பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தலைமை தாங்கியுள்ளார். இதை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கியுள்ளார். அதன்பின் அவர் கற்பிக்கும் பாடப் புத்தகங்களையும் வழங்கியுள்ளார். இதனை அடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“18 வயது மேல் இருக்க வேண்டும்” பள்ளியில் முகாம்…. ஆட்சியரின் ஆய்வு….!!

கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் போட்டுக் கொண்டுள்ளனர். இதனை அடுத்து வி.சி.மோட்டூர் ஊராட்சி பள்ளியில் வைத்து நடைபெற்ற தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். மேலும் இந்த ஆய்வின் போது வாலாஜா தாசில்தார் ஆனந்தன் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மொத்தமாக 2252…. சிறப்பாக நடைபெற்ற முகாம்…. அதிகாரிகளின் செயல்….!!

கொரோனா தடுப்பூசி முகாமில் 2,252 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி ஒன்றியத்தில் 5௦-ற்கும் அதிகமான பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் ஒவ்வொரு ஊராட்சியிலும் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் ஊராட்சி தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்களின் துணையோடு தற்போது வரை 1,884 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனை அடுத்து நெமிலி பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் தலைமையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 167 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய கடை உரிமையாளர்…. போலீஸ் நடவடிக்கை….!!

புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஏகாம்பரநல்லூர் கூட்ரோடு பகுதியில் சக்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவர் தனது கடையில் தடை செய்யப்பட்டிருக்கும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. அந்நேரம் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் சக்தியை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பின்தங்கி இருக்கு…. சிறப்பாக நடைபெற்ற ஆய்வு கூட்டம்…. கலெக்டரின் தகவல்….!!

ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் வைத்து ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, 15-வது நிதி திட்டத்தின் கீழாக பணிகளை முடிப்பதில் இம்மாவட்டம் பின்தங்கி இருக்கிறது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

புரியாமல் நின்ற பயணிகள்…. முன்னறிவிப்பு இல்லை…. பேருந்தில் அலைமோதிய கூட்டம்….!!

முன்னறிவிப்பு எதுவும் இன்றி ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முகுந்தராயபுரத்திருந்த திருவலம் செல்லும் ரயில் நிலையங்களுக்கு இடையே பொன்னையாற்று பாலத்தின் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. இதை சரி செய்வதற்கான பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதன் காரணத்தினால் சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோலார்பேட்டை பகுதிக்கு புறப்பட்டு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டு வேலூர் கண்டொன்மென்ட் செல்லும் மின்சார ரயில் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“இங்கேயே சுத்திக்கிட்டு இருக்கோம்” வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா பொட்டலங்களுடன் சுற்றித்திரிந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா அணைக்கட்டு ரோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அணைக்கட்டு ரோட்டில் பலமுறை அவ்வழியாக சுற்றித்திரிந்த வாலிபரை அழைத்து காவல்துறையினர் மடக்கி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவரது பாக்கெட்டில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அந்த வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர்  கீழ் படவேட்டம்மன் கோவில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

துப்பாக்கியுடன் செல்ல வேண்டும்…. காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு…. சூப்பிரண்டு உத்தரவு….!!

காவல்துறையினர் துப்பாக்கியுடன் சந்தேகத்திற்குரிய பகுதிகளில் ரோந்து செல்ல வேண்டும் என காவல்துறை சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தின் காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் அரக்கோணம் காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு செய்துள்ளார். இந்நிலையில் அரக்கோணம் காவல்துறை துணை சூப்பிரண்டு அலுவலகத்தில், காவல்துறை துணை சூப்பிரண்டு புகழேந்திகணேஷ் தலைமையிலான தாலுகா இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு  தீபா சத்யன் கலந்து கொண்டு அரக்கோணம் அருகாமையில் 4 பேரை தாக்கியும், துப்பாக்கியால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“என்ன புகையா வருது” திடீரென பற்றி எரிந்த வேன்…. ராணிபேட்டையில் பரபரப்பு….!!

ஓடும் வேன் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிகின்ற ஊழியர்கள் 7 பேர் திருவள்ளூர் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து தொழிற்சாலைக்கு வேனில் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் தொழிற்சாலை அருகாமையில் வந்த போது திடீரென வேனிலிருந்து புகை வந்ததால் ஓட்டுநர் நிறுத்தி உள்ளே இருந்த ஊழியர்களை கீழே இறக்கி விட்டு புகை வெளியேறுவதை சரி செய்ய முயன்றுள்ளார். அப்போது திடீரென வேன் தீப்பிடித்து எரிந்துள்ளது. இது பற்றி தகவல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“யூடியூப் பார்த்து பெண்ணிற்கு பிரசவம்” கணவன் கைது…. போலீஸ் நடவடிக்கை….!!

வியாபாரி ஒருவர் தனது மனைவிக்கு வீட்டில் வைத்து பிரசவம் பார்த்ததில் ஆண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெடும்புலி புதுப்பேட்டை பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மரசெக்கு மூலமாக எண்ணெய் தயாரித்து வியாபாரம் செய்து வருகின்றார்‌. அதன்பின் லோகநாதன் மரபுவழி மற்றும் இயற்கை ஆர்வம் உடையவர் என கூறப்படுகின்றது. இவருக்கு திருமணமாகி கோமதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் 2 வருடங்களுக்கு பின் கோமதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதில் இவருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மொத்தமாக 393 மனுக்கள்…. சிறப்பாக நடைபெற்ற கூட்டம்…. ஆட்சியரின் உத்தரவு….!!

163 நபர்களுக்கு நிவாரண நிதியாக ஒரு கோடியே 34 லட்சம் ரூபாயை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் வைத்து மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து நிலப்பட்டா குறைகள், இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண்மை துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“பிளாஸ்டிக் இல்லாத பகுதி” பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…. ஆட்சியரின் தகவல்….!!

பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அதற்கான மாற்று பொருட்கள், பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்ப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வாகன பிரச்சாரம் தொடக்கம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றுள்ளது. இதை மாவட்ட கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, சென்னை ஐகோர்ட் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல்ப்படுத்தவும் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பழுதடைந்த பள்ளிக்கூடங்கள்…. தொடர்ந்து கடைசி இடம்…. ஆட்சியரின் தகவல்….!!

தடுப்பூசி போட்டுக் கொள்வதில் கடைசி இடத்தில் இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் பழுதடைந்து இருக்கும் பள்ளி கட்டிடங்களை விரைவாகக் கண்டறிந்து அவற்றை இடிக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும், பழுதான கட்டிடங்களுக்கு அருகில் மாணவ-மாணவிகள் செல்லாமல் இருக்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்குமாறும், 2 வாரங்களுக்கு முன்னதாகவே பழுதடைந்த கட்டிடங்களை கண்டறியும் பணிகளை செய்து தற்போது அதை இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதைப் போன்றே பள்ளிகளில் படிக்கும் ஏழ்மை நிலையில் இருக்கும் மாணவ-மாணவியர்களின் குடும்ப சூழ்நிலையை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“ஒழுங்கா படிக்க மாட்டியா” மகளை திட்டிய தாய்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சரியாக படிக்காத காரணத்தினால் தாய் திட்டியதால் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வடகால் பகுதியில் யுவலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் யுவலட்சுமி சரியாக படிக்காத காரணத்தினால் அவரின் தாய் அவரை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த யுவலட்சுமி வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கிறார். அதன்பின் மகளை நீண்ட நேரமாகியும் காணவில்லை என […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஆபத்து என்றால் அழைக்கலாம்…. சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி…. போலீஸின் செயல்….!!

காவல்துறை சார்பாக மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றதுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாப்பேட்டை காவல் நிலையம் சார்பாக குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி மங்களாம்மாள் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன் மற்றும் சித்ரா ஆகியோர் கலந்து கொண்டு மாணவ-மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சைல்டு லைன் அவசர தொலைபேசி எண்ணையும் மற்றும் காவல்துறை சூப்பிரண்டு மற்றும் துணை காவல்துறை சூப்பிரண்டு ஆகியோரின் நேரடி தொலைபேசி எண்ணையும் தெரிவித்துள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

65 வயது இருக்கும்…. தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. போலீஸ் விசாரணை….!!

ரயில்வே தண்டவாளத்தில் முதியவர் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணம்-திருப்பதி ரயில் மார்க்கத்தில் ரயில் நிலையத்திற்கு இடையே ஜெய்பீம் பகுதியில் தண்டவாளம் அருகில் 65 வயதுடைய முதியவர் சடலமாக கிடந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |