மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்ய சென்ற தொழிலாளிகளை தேனீ கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாசாபேட்டை பகுதியில் அன்பு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நகராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அன்பு மற்றும் அவருடன் பணிபுரியும் தினகரன், சீனிவாசன் ஆகிய 3 பேரும் பூபதி நகர் பகுதியில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்வதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த தேனீகள் 3 பேரையும் சரமாரியாக […]
