சமகாலத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்ள மனித இனத்திற்கு காந்திய கொள்கை அவசியம் தேவைப்படுவதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். அண்ணல் காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த நாளை மத்திய அரசு ஆண்டு முழுவதும் கொண்டாடிவருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று நடந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டார். அப்போது அவர், “அமைதி, சமத்துவம் போன்ற காந்திய கொள்கைகளால்தான் உலக அளவில் அண்ணலுக்கு மரியாதை வந்து சேர்ந்தது. எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது அகிம்சை தேவைப்படுகிறது. […]
