முதலமைச்சர் பதவியை இரண்டு ஆண்டுகளுக்கு சிவசேனாவுக்கு அளிப்பது குறித்து இரு கட்சிகளிடம் பேசிவருவதாக மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதனிடையே, மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, மகாராஷ்டிரா அரசியல் குழப்பம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சர் ராவத்திடம் சமரசம் குறித்து பேசி வருகிறேன். முதலமைச்சர் பதவியை மூன்று ஆண்டுகள் பாஜகவுக்கும் இரண்டு […]
