ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காமன்கோட்டையில் கண்ணம்மாள்(68) என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி தனது மகன் வழி பேத்தி மற்றும் பேரனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எனது மகன் தர்மலிங்கம் டெங்கு காய்ச்சல் காரணமாக இருந்துவிட்டார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எனது மருமகள் நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தையை மட்டும் தூக்கிக் கொண்டு எங்கோ சென்று விட்டார். இதனால் கார்த்திகா(8), லாவண்யா(13), […]
