அயோத்தி ராம ஜென்ம பூமி- பாபர் மசூதி வழக்கு கடந்துவந்த பாதையை சுருக்கமாக இங்கு காணலாம். பாபர் மசூதி 1528ஆம் ஆண்டு முகலாயப் பேரரசர் பாபரின் படைத்தளபதி மிர் பாஹி பாபர் மசூதியை கட்டினார். 1859ஆம் ஆண்டு இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஆங்கிலேயர்கள் முள்வேலி அமைத்து அப்பகுதியை இரண்டாக பிரித்தனர். அதன்படி உள்பிரகாரம் இஸ்லாமியர்களாலும் வெளிபிரகாரம் இந்துக்களாலும் பயன்படுத்தப்பட்டுவந்தது. ராமர் சிலை 1885ஆம் ஆண்டு மகந்த் ரகுபர்தாஸ் ஃபைசாபாத் நீதிமன்றத்தில் ராமர் கோயில் கட்ட […]
