உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகக்கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை மார்ச் 11ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் குறித்து மாநிலங்களவை விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று அவை கூடியதும் டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்தன. மேலும் மத்திய […]
