குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோடி பத்தரை மாற்றுத் தங்கம்; அவரது எண்ணங்களை சந்தேகப்பட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜகவுக்கு ஆதரவாக மெஹ்ரௌளியில் பரப்புரை மேற்கொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து இஸ்லாமியர்களிடையே எதிர்க்கட்சியினர் தவறான புரிதலை உருவாக்கிவருகிறனர். நம் இஸ்லாமிய தோழர்களை நோக்கி யாரும் கைநீட்ட மாட்டார்கள். நம் பிரதமர் பத்தரை மாற்றுத் […]
