டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவுக்கு தொடர்பு இருப்பதாக தான் தெரிவித்தபோதும், அவர் அமைதியாக இருப்பது ஏன் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை மந்தைவெளியில் உள்ள ராணி மெய்யம்மை பள்ளியில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினர். இதன் பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள […]
