Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : ”நளினி மனு தள்ளுபடி” விடுதலை கனவு கலைந்தது …!!

நளினி தன்னை சட்டவிரோத காவலில் வைத்துள்ளதாக தொடர்ந்த வழக்கில் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “28 ஆண்டுகளாக தான் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், 10 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த 3,000க்கும் மேற்பட்ட கைதிகள், நன்னடத்தை விதியின் கீழ் […]

Categories
மாநில செய்திகள்

எழுவர் விடுதலை தொடர்பில் ஆளுநருக்கு முதல்வர் அழுத்தம் கொடுப்பார் – அற்புதம்மாள் நம்பிக்கை!

உச்சநீதிமன்றம் உத்தரவுபடி, ஏழு தமிழர் விடுதலை குறித்து என்ன முடிவு செய்யப்பட்டுள்ளது என ஆளுநரிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்பார் என அற்புதம்மாள் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடலூரை அடுத்த ஆண்டாள் முள்ளிப்பள்ளம் பகுதியில் திராவிடர் கழக மூத்த உறுப்பினர் கோதண்டபாணி கமலா அம்மாள் அவர்களின் படத்திறப்பு விழாவில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கலந்து கொண்டார். அதன் பின்னர் ஊடகங்களை சந்தித்த அளித்த அவர், ’முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நிரபராதிகளான என் மகன் பேரறிவாளன் உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

7 பேரை விடுதலை செய்ய தங்களுக்கு அதிகாரம் இல்லை – தமிழக அரசு..!

7 பேரை விடுதலை செய்ய தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய கடந்த 2018 செப்டம்பர் 9-ஆம் தேதி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 11-ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் இந்த பரிந்துரை மீது ஆளுநர் எந்த ஒரு முடிவும் எடுக்காததால், தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் […]

Categories
மாநில செய்திகள்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ரவிச்சந்திரனுக்கு விடுப்பு!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனுக்கு 15 நாள்கள் சாதாரண விடுப்பு வழங்கி மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவர் ரவிச்சந்திரன். இவரின் தாயார் ராஜேஸ்வரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் எனது மகன் ரவிச்சந்திரன் உள்ளார். 28 ஆண்டுகளில் 4 முறை மட்டுமே சாதாரண விடுப்பில் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

‘என்னையும் எனது கணவரையும் கருணைக் கொலை செய்யுங்கள்’… பிரதமருக்கு நளினி கடிதம்.!!

விடுதலை செய்ய முடியாவிட்டால், தன்னையும் தன் கணவரையும் கருணைக் கொலை செய்து விடுங்கள் என, பிரதமர் நரேந்திர மோடிக்கு நளினி உருக்கமாகக் கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன் ஆகிய இருவரும் வேலூர் மத்திய சிறையில் உள்ள ஆண்கள், பெண்கள் பிரிவில் தனித்தனியே தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த வழக்கில், இவர்கள் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கருத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சீமான் கூறியது அநாகரீகமான ஒன்று”… கனிமொழி பேட்டி..!!  

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியது அநாகரீகமான ஒன்று  நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். சர்வதேச நாடாளுமன்ற அமைப்பின் சார்பாக செர்பியாவில் நடைபெற்ற பொதுகூட்டத்திற்கு இந்தியா சார்பில் சென்ற தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘செர்பியாவில் நடைபெற்ற சர்வதேச நாடாளுமன்ற பொதுக்கூட்டத்திற்கு இந்தியாவின் சார்பில் என்னை அனுப்பிய சபாநாயகருக்கும், தலைவர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ராஜீவ் காந்தி படுகொலை குறித்து நாம் […]

Categories
அரசியல்

#BREAKING : ”7 பேரை விடுவிக்க முடியாது” முதல்வரிடம் ஆளுநர் விளக்கம் …!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் தண்டனை பெற்று வருகின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்து  தமிழக அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. ஆனால் ஆளுநர் இன்று வரையில் எந்த முடிவும் எடுக்காமல் மெளனம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிர்ச்சியில் நாம் தமிழர் ”சீமானின் முகத்திரை கிழிப்பு” புலிகள் பரபரப்பு அறிக்கை …..!!

ராஜிவ் காந்தி படுகொலையில்எங்களுக்கும் தொடர்பு இல்லை என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் அறிக்கை வெளியிட்டுள்ளனர். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு […]

Categories
தேசிய செய்திகள்

ராஜிவ் காந்தி 75 -ஆவது பிறந்த நாள்…. ராகுல், சோனியா, பிரியங்கா உள்ளிட்டோர் அஞ்சலி..!!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ராகுல், சோனியா, பிரியங்கா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75 -ஆவது பிறந்த நாள்  இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பிறந்த தினத்தை முன்னிட்டு  காங்கிரஸ் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியின்  வீர் பூமியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தியின்  நினைவிடத்தில் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி […]

Categories
மாநில செய்திகள்

“முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு” 1 மாத பரோலில் வெளி வந்தார் நளினி..!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினி  1 மாத பரோலில் வெளி வந்துள்ளார்  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மகளிர் சிறையில்  தண்டனை அனுபவித்து வரும் நளினி மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக நீதிமன்றத்தில் 6 மாதம் பரோல் கேட்டிருந்தார். ஆனால் நீதிமன்றம் 1 மாத பரோல் வழங்கியது. இந்நிலையில் சிறையில் இருந்து 1 மாத பரோலில் பலத்த பாதுகாப்புடன் நளினி சத்துவாச்சாரியில் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ராஜீவ் காந்தி 28–வது நினைவு தினம்” சோனியா, ராகுல் அஞ்சலி..!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு தனது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து வேறு வழியின்றி ராஜீவ் காந்தி காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்று வழிநடத்தினார். இவரது ஆட்சி காலத்தில் இந்தியா தொழில்நுட்பத்தில் நல்ல வளர்ச்சி கண்டது. பின்னர் 1991-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்னை வந்த போது ஸ்ரீ பெரம்பத்தூரில் வைத்து திட்டமிடப்பட்டு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி படு கொலை […]

Categories
அரசியல்

‘ராஜீவ்காந்தி ஊழல்களில் நம்பர் 1’ -விமர்சித்த மோடி !! காங்கிரஸ் புகார்!!!

காங்கிரஸ், பிரதமர் மோடி தேர்தல் விதிகளை மீறியுள்ளார் என தேர்தல் ஆணையத்திடம்   புகார் அளித்துள்ளது. ராஜீவ்காந்தியைக் கறைபடியாதவர் என கூறி வந்த மோடி , தற்போது ”ஊழல்களில் முதன்மையானவர் அதனால் ,அவருடைய ஆயுள் முடிந்து விட்டது” என பேசியுள்ளார் என்று   காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. மறைந்த ராஜீவ் காந்தியை , அவமதிக்கும் வகையில் மோடி பேசியுள்ளார் எனவும்  ,புகாரில் கூறப்பட்டுள்ளது .

Categories

Tech |