அரசியலில் அடியெடுத்து வைக்கப் போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் ஒருபோதும் தெரிவிக்கவில்லை என்று திரு தமிழருவி மணியன் புதிய விளக்கம் அளித்துள்ளார். காந்திய மக்கள் இயக்கத்தின் திரு.தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் ரஜினிகாந்த் எப்போதும் அரசியலில் அடியெடுத்து வைக்கப் போவதில்லை என்று அறிவிக்கவில்லை. ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விடவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். ரஜினி ரசிகர்கள் சிலர் திமுகவில் இணைந்து வருவதை சூசகமாக சுட்டிக்காட்டிய அவர், சிஸ்டத்தை சீரழித்தவர்களிடமே சில ரசிகர்கள் சரணடைந்து இருப்பதை […]
