நடிகர் ரஜினிகாந்த் தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் திரைப்பட துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதினை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். திரை துறையில் செய்த சாதனைகளுக்காக அமிதாப்பச்சனுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மேலும் 2 […]
