ஜமாத் தலைவர்களை உதாசினபடுத்தியதாகக் கூறி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து கொடைக்கானலில் இஸ்லாமிய அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைக்கு சென்ற பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் ஜமாத் தலைவர்கள் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி மனு அளித்துள்ளனர். அதற்கு அவர் அதிமுகவிற்கா ஓட்டு போட்டீர்கள்? ஜம்மு-காஷ்மீரில் மக்களை ஒடுக்கியது போல் களக்காடு பகுதியையும் ஒடுக்குவோம் என்றும் உதாசினப்படுத்தி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இச்சம்பவத்தை கண்டிக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்டம் […]
