நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் கைது செய்யப்பட்ட உதித் சூர்யா_வை BCID போலீசார் தேனி அழைத்துச் சென்றனர். உதித் சூர்யா என்ற மாணவன் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக தேனி கல்லூரி முதல்வர் ராஜேந்திரனின் புகார் அளித்திருந்தார். இந்த புகாரையடுத்து தேனி போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்து உதித் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வந்தார்கள். தண்டையார்பேட்டையில் இருந்து வந்த உதித் சூர்யா , அவரின் தந்தை வெங்கடேசன் , தாய் என குடும்பத்தோடு தலைமறைவானார்கள். […]
