வரும் சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் திரு.ராஜேந்திர பாலாஜி எந்தத் தொகுதியில் நின்றாலும் தோற்பது நிச்சயம் என சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ராஜவர்மன் பரபரப்பு பேச்சால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அமைச்சர் திரு.ராஜேந்திர பாலாஜிக்கும் , சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு ராஜவர்மனுக்கும் இடையே நீண்ட காலமாக பனிப்போர் நிலவி வந்துள்ளது. இந்நிலையில் சாத்தூரில் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கூட்டத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.ராஜவர்மன் அமைச்சர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் இது […]
