சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 2020 ஆம் ஆண்டின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. கோயம்பத்தூர் மாவட்டம் காந்திபுரம் பகுதியில் வசித்து வருபவர் மகேந்திரன். இவர் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சென்ற ஆண்டு ஜனவரி மாதம் திடீரென இதயத்தில் கோளாறு ஏற்படுத்தபட்டதையடுத்து, இவரது உறவினர்கள் கோயம்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]
