குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையைச் சார்ந்த பிலேந்திரன் என்ற மீனவர், வளைகுடா நாடான கத்தார் பகுதியில் இருந்து விசைப்படகில், மீன் பிடிக்கச் சென்ற போது கப்பல் மோதியதில் உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையினைச் சார்ந்தவர் பிலேந்திரன் வயது (46). இவருக்குத் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மீன்பிடி தொழில் செய்ய வளைகுடா நாடான கத்தாருக்குச் சென்று உள்ளார். இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி வழக்கம் போல சக மீனவர்கள் […]
