சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய விசாரணை கைதியை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி சென்னை மண்ணடி அங்கப்பன் தெருவைச் சேர்ந்த 25 வயதான அருணை கைது செய்து நேற்று முன்தினம் இரவு காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது போலீசாரின் கவனத்தை திசை திருப்பி காவல்நிலையத்தில் முன்பக்க கதவின் மேல் ஏறி அங்கிருந்த சிறிய ஓட்டை வழியாக அருண் தப்பிவிட்டான். […]
