வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அங்குள்ள சுற்றுலாத்தளங்களில் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகையானது அதிக அளவில் காணப்படும். இந்த மாதங்களில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் வருகையும் அதிகளவு காணப்படும். இந்த மூன்று மாதமும் கன்னியாகுமரி சுற்றுலா தளங்களின் மெயின் சீசனாக உள்ளது. […]
