நாகையில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து கொண்டிருந்தது. இந்த வெயிலின் தாக்கம் இரவிலும் தெரிந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி முதல் நாகையில் அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதிலும் குறிப்பாக வேதாரண்யம், வேளாங்கண்ணி, கீழ்வேளூர் போன்ற பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்துள்ளது. இருப்பினும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இதனை […]
