அரை மணி நேரத்தில் தண்டவாளத்தில் விழுந்த விரிசல் சரி செய்யப்பட்ட பின்னர் அப்பாதையில் ரயில் செல்ல அனுமதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வஞ்சிபாளையம் ரயில்வே ஸ்டேஷனானது திருப்பூர்-சோமனூர் இடையே அமைந்துள்ளது. இப்பகுதியில் ரயில்வே ஊழியர்கள் தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தண்டவாளத்தில் லேசான விரிசல் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து தண்டவாள விரிசல் குறித்து திருப்பூர் மற்றும் சூலூர் ரயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் அங்கு விரைந்து வந்த தொழில்நுட்ப குழுவினர் விரிசலை சரி செய்யும் […]
