532 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வேலம்மாள் கல்வி நிறுவனம் ஒத்துக்கொண்டது என்று வருமானவரித் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் வேலம்மாள் கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான 62 இடங்களில் வருமானவரித் துறை அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை மற்றும் மதுரையிலுள்ள வேலம்மாள் கவ்வி அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் கல்வி நிறுவன ஊழியர்களின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து வருமானவரித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இந்த சோதனையில் ரூபாய் இரண்டு கோடி ரொக்க […]
