இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,45,380ஆக உயர்ந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையானது உயர்ந்து வருகிறது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் கொரோனா தொற்று பரவல் குறையும் என அரசு கூறியது, ஆனால் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது […]
