“ரஃபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ராபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்திருந்தது. இதில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை கடந்த 2018 (டிச 14-ல்) விசாரித்து எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று தீர்ப்பினை வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக முன்னாள் மத்திய […]
