ராணிப்பேட்டையில் அதிமுக பிரமுகர் வீட்டில் கல்வீசி தாக்குதல் நடத்திய ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பி இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிபேட்டை மாவட்டம் கலவை பகுதியை அடுத்த மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிதாஸ். இவர் அப்பகுதி அதிமுக பிரமுகர் ஆவார். இவருக்கும் இவரது அண்ணன் குடும்பத்தாருக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு சொத்து கேட்டு அதிமுக பிரமுகர் வீட்டின் வெளியே நின்று அவரது அண்ணன் மகன்களான […]
