ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்க ராணுவம் கடந்த வாரம் கொன்றது. அதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குல் நடவடிக்கைகளை கண்டித்து நியூ யார்க்கில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில், ‘ஈரானுடன் போர் வேண்டாம்’ (Say no to war with Iran), ‘ஈரானுக்கு எதிராக போரோ பொருளாதாரத் தடைகளோ விதிக்கப்படக்கூடாது’ (No […]
