அனைத்து வகுப்புகளுக்கு நாளை(திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என புதுவை அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் என அனைத்து இடங்களும் மூடப்பட்டன. அதன்பின் அறிவிக்கப்பட்ட சில தளர்வுகளால் மக்களின் வாழ்க்கை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான வகுப்புகள் […]
