ஒடிசா மாநிலம் பூரி ஜெகன்நாத் ஆலய தேரோட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஜெகன்நாதர் ரத யாத்திரையை நடத்தலாம் என அனுமதியளித்துள்ளது. தேரோட்டத்தில் பங்கேற்கும் பக்தர்களின் சுகாதாரம், பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். உலக புகழ்பெற்ற ஒடிசா பூரி ஜெகன்நாத் ரதயாத்திரைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து கடந்த 18ம் தேதி உத்தரவிட்டது. அப்போது நடந்த வழக்கு விசாரணையில், கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இதுபோன்ற கூட்டங்கள் […]
