தங்கக் கம்மலை விழுங்கிய கோழி மருத்துவ சிகிச்சையில் உயிரிழந்ததால் அதன் உரிமையாளர் கதறி அழுதது நெகிழ்ச்சியடையவைத்துள்ளது. சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் சிவகுமார்.இவர் கடந்த ஆண்டு ஒரு நாட்டுக் கோழியை வாங்கி அதற்கு பூச்சி என்று பெயர் வைத்து அதை பாசத்துடன் வளர்த்து வந்தார். அவரது சகோதரியின் மகள் தீபாவுக்கும் கோழியின் மீது எக்கச்சக்க பாசம். தீபா வீட்டில் இருக்கும் நேரங்களில் கோழியிடம் உற்ற நண்பராகி விடுவார்.கோழியும் தீபாவை சுற்றி சுற்றிவரும் இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீபா தான் அணிந்திருந்த கம்மலை கழற்றி […]
