விதிமுறைகளை மீறி வாகனத்தை இயக்கிய குற்றத்திற்காக காவல்துறையினர் 4 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலித்துள்ளனர். சென்னை வடக்கு சரக துணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் ஆணையின்படி திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், மோகன் உள்பட மற்றும் பிற அலுவலர்கள் பட்டரைபெருமந்தூர், மப்பேடு, பேரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த பைக்குகள் மற்றும் தனியார் பஸ்களை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். […]
