புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வட மருதூர் பகுதியில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 225 கிலோ எடையுடைய புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது சம்பந்தமாக ஆனத்தூர் கிராமத்தில் வசிக்கும் சித்திக்அலி உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
