சரக்கு வேன் கவிழ்ந்து 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பனையவயல் கிராமத்தில் இருந்து 16 தொழிலாளர்கள் சரக்கு வேனில் விவசாய பணிகளுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை பழனியப்பன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பெருநாவலூர் கிராமத்திற்கு அருகே சென்ற போது பழனியப்பன் ஒட்டி வந்த சரக்கு வேன் மீது மற்றொரு சரக்கு வேன் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சரக்கு வேன் தலைகுப்புற கவிழ்ந்ததால் வசந்தா, சிந்தாமணி, பூங்கொடி, […]
