குறைந்த அழுத்த மின்சாரத்தை சீரமைத்து தர கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள நாகமங்கலம் கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுடைய வீடுகளில் கடந்த இரண்டு மாதங்களாக குறைந்த அழுத்த மின்சாரத்தால் டிவி, மின்விசிறி, மின்மோட்டார், குளிர்சாதனப் பெட்டி, மிக்சி, கிரைண்டர் போன்ற மின்சாதன பொருட்கள் சரியாக இயங்கவில்லை. இதனால் மின்சாதன பொருட்கள் பழுதடைந்து போகின்றது. மேலும் குடிநீரும் சரியாக விநியோகிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து அவர்கள் சம்மந்தப்பட்ட […]
