ஊராட்சி செயலாளரை பணி இடமாற்றம் செய்யக் கோரி பொதுமக்கள் அலுவலகத்தை பூட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னகம்மியம்பட்டு பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருட்செல்வி என்ற மனைவி உள்ளனர். இவர் அதே பகுதியில் இருக்கும் ஊராட்சியில் 25 வருடங்களுக்கும் அதிகமாக செயலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஊராட்சி செயலாளர்களை பணி இடமாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனால் இப்பகுதியின் ஊராட்சி செயலாளரான […]
