விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி காங்கிரஸ் கட்சியினர் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் தாலுகாவிற்கு உட்பட்டு சங்கரபேரி, இளவேளங்கால் போன்ற பல்வேறு கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்களில் வெங்காயம், மக்காச்சோளம், உளுந்து, பருத்தி, நெல் போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட்டனர். இந்நிலையில் பருவமழை தாமதமாக பெய்தது மட்டுமல்லாமல் பயிர்களை படைபுழு நோய் மற்றும் மஞ்சள் தேமல் நோய் தாக்கியுள்ளது. இதனிடையே பயிர் காப்பீடு செய்து […]
