ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டப்பேரவை கூட்டத்தொடரிலிருந்து டிடிவி தினகரன், தமிமுன் அன்சாரி வெளிநடப்புச் செய்துள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2020ஆம் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. ஆளுநர் உரையை புறக்கணித்து பிரதான எதிர்க்கட்சியான திமுக வெளிநடப்புச் செய்தது. இதேபோல் காங்கிரஸ், அமமுக, மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வெளிநடப்புச் செய்தன. இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “அமமுக சார்பில் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளியேறியுள்ளோம். குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்ததை […]
