கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நாதேகவுண்டன்புதூர் கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் சரியாக விநியோகித்த படாததால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் கோபமடைந்த பெண்கள் அப்பகுதியில் உள்ள சாலையில் […]
