கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெட்டதாபுரத்தில் சக்தி இன்ஜினியரிங் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு 320 மாணவர்களும், 70 மாணவிகளும் படித்து வருகின்றனர். நேற்று மதியம் மாணவர்கள் கல்லூரியை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது, கடந்த 10- ஆம் தேதி விடுதியில் மாணவர்களுக்கு சாப்பாடு வழங்கப்பட்டது. அப்போது தட்டப்பயறு குழம்பு இருந்ததை பார்த்த பிரசாந்த், காண்டியப்பன், யுவராஜ், அபிநவ் […]
