விபத்தில் உயிரிழந்த தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போளுவாம்பட்டி பகுதியில் பழனி, பழனி சாமி என்ற இரண்டு தூய்மைப் பணியாளர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் பேட்டரி ஆட்டோ நொய்யல் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்து விட்டனர். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் உடலை […]
