திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு வேலை பார்க்கும் நர்ஸ் ஒருவர் நோயாளிகளை தரக்குறைவாக பேசுகிறார். மேலும் விரைந்து முதலுதவி சிகிச்சை அளிக்காமலும், கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்காமலும் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து சம்பந்தப்பட்ட நர்ஸை இடமாற்றம் செய்வதாக டாக்டர் […]
