பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள முத்தோரை பாலடாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப்பள்ளி செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை இருக்கும் இந்த பள்ளியில் மாணவர்களுக்காக தங்கும் விடுதி, ஆசிரியர்களுக்கு குடியிருப்பு வசதி இருக்கிறது. ஆனால் தேவையான அளவு தண்ணீர் வசதி இல்லாததால் மாணவர்கள் […]
