அரை நிர்வாண கோலத்தில் சமூக ஆர்வலர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் குமாரகுப்பம் பகுதியில் சமூக ஆர்வலரான பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு பொங்கல் பானை, விறகு, கரும்பு ஆகியவற்றை வைத்து அரை நிர்வாண கோலத்தில் பிரகாஷ் பொங்கல் வைக்க முயன்றுள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் பிரகாஷை தடுத்து நிறுத்தி பொங்கல் மண்பானையை […]
