குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள விளாச்சேரி, கலைஞர் நகர், மொட்டமலை போன்ற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த இரண்டு மாதமாக குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் காசு கொடுத்து லாரிகளில் விற்கப்படும் தண்ணீரை வாங்குகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட […]
